ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள்: கதிர்காமம் கிரிவெஹெரவில் பல புண்ணிய நிகழ்வுகள்.

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி வரலாற்று சிறப்பு மிக்க புனித கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் நேற்றும் இன்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிறப்பு பூஜை வழிபாடுகள் மஹாசென் தேவாலயத்தில் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து அஷ்டபலபோதியா வில் சமய அனுஷ்டானங்கள் நடந்தன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புனித அரச மரத்திற்கு அட்டபிரிகரை வழங்கினார்.

மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து தூபிக்கான சிறப்பு வஸ்திர (கப்ருக்க) பூஜை இடம்பெற்றன.

தொடர்ந்து முழு இரவு பிரித் பிரசங்கம் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்கு பிரிகர மற்றும் காலை நேர தானம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள், கட்சியோடு இணைந்த பிரிவுகளின் தலைவர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2020 ஜனவரி மாதத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டில் முற்போக்காக கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் எனப் பல்வேறு சமூக மற்றும் அரசியல் ரீதியிலான உன்னத சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.