இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்..

இலங்கை முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

1998 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டத்தின்படி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 4 ஆயிரத்து 289 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது.

இந்த வழக்குகளில் 1,683 வழக்குகள் இவ்வருடம் ஜனவரி மாதம் எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆபாச படங்களை இடுகையிடுதல், பாலியல் வன்கொடுமை செய்தல், குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு அமர்த்துதல் அல்லது பணியமர்த்தல், அவர்களைக் கொடுமைப்படுத்துதல் போன்ற குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.