ஜனாதிபதியைச் சந்தித்த புதிய இராணுவத் தளபதி!
இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அரச தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாயப் படி ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் சம்பிரதாய ரீதியாக நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டதுடன், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலந்த பிரேமரத்னவுக்கு ஜனாதிபதி தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
