இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை: ‘களு மல்லி’ டுபாயில் சிக்கினார்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற ‘தெஹிபாலே மல்லி’யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் சத்சர என்ற ‘களு மல்லி’ என்பவர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.

தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த இவர் மீது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கைப் பொலிஸார் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில், டுபாய் அதிகாரிகளால் துரிதமாகச் செயற்பட்டு இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.