காட்டு யானை தாக்கி இருவர் பரிதாபப் பலி!

கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீழ் உஸ்கொல்லேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கெப்பித்திகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 67 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

உஸ்கொல்லேவ 28ஆம் இலக்க வயல்வெளியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே இவர்கள் இருவரும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.