மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று காந்தி ஜெயந்தி நிகழ்வு – உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை.
https://we.tl/t-nrisAySHe8AiKT1t
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இன்று காலை அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை, இந்தியத் துணைத் தூதரகமும் சாந்தி சேவா சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்வின்போது மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அவரது அஹிம்சை, உண்மை, அமைதி மற்றும் மனிதநேயக் கொள்கைகள் நன்றியுடன் நினைவுகூரப்பட்டன.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர், இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், சமயத் தலைவர்கள், சாந்தி சேவா சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மகாத்மா காந்தியின் பிறந்த தினமான ஒக்டோபர் 2ஆம் திகதி, அகில உலக அளவிலும் இலங்கையிலும் உள்ள இந்தியத் தூதரகங்களின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் ‘காந்தி ஜெயந்தி’யாக நினைவுகூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
