நோர்ட்டன் பிரிட்ஜில் கோர விபத்து இ.போ.ச. பஸ் மோதி மாணவன் மரணம்!

நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 7.30 மணியளவில், நோர்ட்டன் பிரிட்ஜ் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஜெயராம் போல் ராஜ் என்ற மாணவன் சைக்கிளில் நோர்ட்டன் பிரிட்ஜ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, லக்சபான – ஹட்டன் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச.) சொந்தமான பஸ்ஸுடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தண்டுகலா தோட்டம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த மேற்படி மாணவன் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.