கடற்படையினரின் தாக்குதலில் கண் இழந்தார் தமிழக மீனவர்!

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானவர் எனக் கூறப்படும் ஜோன்சன் (வயது 48) என்ற தமிழக மீனவர் கண்ணை இழந்துள்ளார்.

இந்தத் தகவலை தமிழக ஊடகங்களும் இலங்கை ஊடங்களும் இன்று வெளியிட்டுள்ளன.

இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 14ஆம் திகதி மீன்பிடிக்க 530 ஆம் இலக்க படகில் வந்த மீனவர்களைச் சிறைப் பிடித்த இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டு நீண்ட நேரத்தின் பின்பு அவர்களை விடுத்துள்ளனர்.

15 ஆம் திகதி காலை கரை திரும்பிய மீனவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் ஒரு கண்ணில் பெரிய பாதிப்பு காணப்பட்டதால் வேறு மார்க்கம் இன்றி அந்தக் கண் அகற்றப்பட்டு, அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக இராமேஸ்வரம் மீனவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.