நேற்று இலங்கை வந்த அஜித் தோவல் இன்று திரும்புகிறார்

கடந்த சனிக்கிழமை எமது செய்தியில் தெரியப்படுத்தியவாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்து விட்டு இன்று இரவு நாடு திரும்பவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரையும் டோவல் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.

இன்று பிற்பகல் ஜனாதிபதியுடன் தோவல் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி இன்று இரவு அவர் இலங்கையிலிருந்து புறப்பட உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.