சும்மா லூசு மாதிரி பேசிட்டு இருக்காதீங்க அசீம்.! அசீமை அலறவிட்ட ஜனனி (வீடியோ)

முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரம் ஒளிபரப்பும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் செய்யும் அனைத்து விஷயங்களையும் லைவ்வாக பார்க்க முடிகிறது.

கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் சண்டை, சச்சரவு தொடர்ந்து கொண்டே இருந்தது. மேலும் தொடர்ந்து விதிமீறல்கள் நடந்து வந்தது. இதனால் பலரும் நிகழ்ச்சியை ஒழுங்காக கொண்டு செல்லுமாறு கமலஹாசனுக்கு கோரிக்கை வைக்க, அவரும் வார இறுதி நாட்கள் எபிசோடில் வந்து போட்டியாளர்களை வறுத்து எடுத்து விட்டார். தற்போது 14 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், இந்த வாரத்திற்க்கான வீக்லி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சீசன்களில் கடுமையான சண்டை ஏற்படும் டாஸ்க்கான பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் வைத்துள்ளார் பிக்பாஸ்.

இதில் பழங்குடி மக்களிடம் இருக்கும் செல்வதை ஏலியன் சேர்ந்தவர்கள் திருட வேண்டும் என்பது தான் டாஸ்க். பழங்குடியினரிடம் இருக்கும் வளத்தை திருட ஏலியன்கள் அவர்களை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

தற்போது ஜனனி மற்றும் அசீம் இடையே சண்டை எழுந்துள்ளது. அசீமை பார்த்து லூசு மாதிரி பேசாத என்று ஜனனி சொல்ல அசீம் செம்ம கடுப்பு ஆகிறார்.

Leave A Reply

Your email address will not be published.