உலக கோப்பை கால்பந்து – ஸ்பெயினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான்.

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் ஜப்பான், ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்தில் 11வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைபடுத்தினார்.

இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பானின் ரிட்சு டான் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.

மற்றொரு வீரர் டனகா 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியில், ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

ஸ்பெயின் அணி தோல்வி அடைந்தாலும் கோல்கள் அதிகமாக அடித்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Leave A Reply

Your email address will not be published.