வீட்டை விட்டு வெளியேறினார் 8-வது போட்டியாளர்.!

பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்போது எட்டாவது போட்டியாளராக பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது பிக்பாஸ் சீசன் 6. சீசன் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு சீசன்களும் சரியாக ஓடாத காரணத்தினால், சீசன் சிக்ஸை மிகப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்ட வேண்டும் என்று திட்டமிட்டு பல சர்ச்சையான போட்டியாளர்களை உள்ளே இறக்கி இருந்தது பிக்பாஸ் குழு.

அதேபோல் உள்ளே சென்ற பலரும் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு சென்று வருகின்றனர். ஆனால் இதில் பல போட்டியாளர்கள் உள்ளே இருந்து கொண்டு பார்வையாளர்கள் போல் அமர்ந்து மிக்சர் சாப்பிட்டு வந்தனர்.

இதனால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு சோர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு மிக்சர் போட்டியாளர்களும் நாமினேஷனில் வரும் போது கரெக்டாக ஸ்கெட்ச் போட்டு அவர்களை தூக்கி வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

இதுவரை ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஸினி, ராபர்ட் மாஸ்டர் என மொத்தம் 7 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

21 போட்டியாளர்களுடன் நடை தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசன் 6 தற்போது 14 போட்டியாளர்களுடன் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வாரம் கதிரவன், ரட்சிதா, தனலட்சுமி, ஜனனி, மைனா, குயின்சி என ஆறு நபர்கள் நாமினேஷனில் இருந்தனர். நேற்றைய எபிசோடில் கதிரவன் மற்றும் ரட்சிதாவை கமல் காப்பாற்றி இருந்தார். இன்று தனலட்சுமி காப்பாற்றப்பட்டு இருப்பார் என்று தெரிகிறது.

மீதம் ஜனனி, மைனா, குயின்சி ஆகிய மூன்று நபர்கள் மட்டுமே அமர்ந்திருந்த நிலையில் ஒரு பெட்டியை கொடுத்து யாருடைய பெயர் இருக்கும் பெட்டி திறக்கப்படுகிறதோ அவர்தான் இந்த வாரம் வெளியேறும் நபர் என்று கமல் கூறுகிறார்.

மைனாவின் பெட்டி திறக்கப்படவில்லை என்று மைனா கூறுகிறார். ஜனனி பெட்டியும் திறக்கப்படவில்லை என்றே தெரிகிறது. குயின்சியின் பெட்டி திறக்கப்பட்டு உள்ளே அவருடைய பெயர் இருக்கும் காரணத்தினால் அவர்தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது.

ஆரம்பம் முதலே குயின்சி திரையில் தெரியாமலே இருந்து வந்தார். ஆனால் தனது கருத்துக்களை நியாயமாகவும் சரியாகவும் வைத்து வந்தார்.

இருப்பினும் விளையாட்டில் போதிய ஆர்வமும், வீட்டு வேலைகளில் சரியான ஈடுபாடும் இல்லாத காரணத்தினால் அவர் அதிகமாக திரையில் தெரிவது இல்லை. எனவே அவர்தான் இந்த வாரம் வெளியேறி இருக்கிறார் என்ற உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.