வயிற்றைக்கிழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி… உதவி செய்யாமல் வீடியோ எடுத்த மக்கள் !

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் உள்ள அமரியா காவல் நிலையத்திற்குட்பட்ட மாதோபூர் கிராமத்தின் புறநகரில் உள்ள கோதுமை வயலில் ஒன்பது வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உத்தரபிரதேசத்தில் உள்ள அமரியா காவல் நிலையத்திற்குட்பட்ட மாதோபூர் பகுதியில் அனம் என்ற 3 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் , வயிறு வெட்டப்பட்டு , உள்ளுறுப்புகள் சிதறிய நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தந்தை அனிஸ் அகமது கூறுகையில், வெள்ளிக்கிழமை இரவு அருகாமையில் உள்ள கிராமமான சரிந்தா பட்டியில் நடந்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனம் தனது மாமா ஷதாப் அகமதுவுடன் சென்றுள்ளார். அனால் அன்று இரவு மர்மமான முறையில் காணாமல் போனாள் என்றார்

குடும்பத்தினர் அவளைத் தேடிய நிலையில் இறுதியாக சனிக்கிழமை அவளை கோதுமை வயலின் நடுவே கோரமான நிலையில் கண்டுபிடித்தனர்.

மூச்சுவிட கூட சிரமப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் அந்த சிறுமியை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தாக்கியவரின் பெயரை சொல்ல முயன்றுள்ளாள். ஆனால் அதீத ரத்தப்போக்கு காயங்கள், வலியால் இறந்ததாக அவளது தந்தை அனிஸ் அஹ்மத் கூறினார்.

தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் தினேஷ்குமார் பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை பார்வையிட்டார். ஷாகில் வைஸ்தவா என்ற உள்ளூர் கிராமவாசி மீது போலீசார் சந்தேகத்தின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்து அவரை காவலில் எடுத்துள்ளனர்.அனிஸ் அகமதுவுக்கும் ஷாகிலுக்கும் பழைய முன்விரோதம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHO முகேஷ் சுக்லா கூறுகையில், “கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளியில் இருந்து ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்று மீட்கப்பட்டது. தடயவியல் குழு தேவையான அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை குற்றத்திற்கான IPC பிரிவு 302 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து எஸ்பி பிரபு கூறுகையில், “பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், தற்போது பலாத்காரம் இல்லை என்று தெரியவந்துள்ளது. கூரிய ஆயுதத்தால் சிறுமியின் உடலில் 9 இடங்களில் காயம் ஏற்படுத்தப்பட்டு வயிற்றுப்பகுதியை கிழித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

அந்த சிறுமியை முதலில் கண்டறிந்த உள்ளூர்வாசிகள் சிலர் அவளை காப்பாற்றாமல் அவளிடம் யார் இதை செய்தனர் என்று கேள்வி கேட்டு அதை சொல்ல முடியாமல் அவள் வலியால் துடிக்கும் காட்சியை வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

உயிரை காப்பாற்றாமல் சமூக அக்கறை இன்றி நடந்து கொண்ட அந்த நபர்களை தேடி தண்டிக்க இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.