அமுதவாணனை பார்த்து அருவருப்பு படும் ஹவுஸ் மேட்ஸ்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரம் போல தான் இந்த ஒரு வாரம் முழுக்க அவர்கள் இருக்க வேண்டும். அந்த வகையில் விக்ரமனுக்கு அந்நியன், அசீமுக்கு சிவாஜி, நந்தினி நாய் சேகர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அமுதவாணனுக்கு ரத்தக்கண்ணீர் எம்ஆர் ராதா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. நேற்று அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருந்தார். அவரது தோற்றம் அப்படியே அந்த மோகனசுந்தரம் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக இருந்தது. எம் ஆர் ராதாவுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் ரத்தக்கண்ணீர் தான்.

இந்தப் படத்தில் அவரது நடிப்பு அபரிவிதமாக இருக்கும். இப்போது வரை அவருடைய கதாபாத்திரம் பேசப்பட்ட வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கடைசியில் எம் ஆர் ராதாவுக்கு தொழுநோய் வந்தது போல காண்பிக்கப்பட்டிருக்கும். அதேபோல் இன்று அமுதவாணன் கெட் அப் போட்டுள்ளார்.

இதைப் பார்த்து பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அருவருப்பு படுகின்றனர். மேலும் இவருடன் உட்கார்ந்து சாப்பிடும் போது அசோகரியமாக இருக்கும் என்று வீட்டுக்குள் சாப்பாடு போடாமல் வெளியே அனுப்பி விடுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.

அந்த சமயத்தில் மணி மற்றும் ஆயிஷா இருவரும் வெளியில் இருக்கும் அமுதவாணனுக்கு சாப்பாடு பரிமாறுகிறார்கள். ஒரு சக போட்டியாளரை போட்ட கெட்டபிற்காக இப்படி வெளியில் வைத்து சாப்பாடு போடுவது மிகவும் மோசமான நிகழ்வாகும்.

அப்போது அமுதவாணன் பக்கம் நின்ற யாரும் அவருக்கு உதவவில்லை. அந்த வகையில் அமுதவாணனின் செல்ல பிள்ளையான ஜனனி கூட அவருக்கு உதவவில்லை. ஆனால் மணி மற்றும் ஆயிஷா இருவரும் அவருக்கு உதவியது தற்போது பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.