‘பட்ஜட்’ வாக்கெடுப்பில் வேலுகுமார் நடுநிலை! – காரணத்தையும் வெளியிட்டடார்.

2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் நடுநிலை வகித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏனைய எம்.பிக்கள் பாதீட்டை எதிர்த்து வாக்களித்திருந்தாலும், வேலுகுமார் எம்.பி. நடுநிலை வகித்தார்.

“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைகளின் தன்னிச்சையான மற்றும் ஏதேச்சையான செயற்பாடுகள் காரணமாகவே இந்த முடிவை எடுத்தேன்” – என்று தனது ஆதரவாளர்களிடம் வேலுகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார் என்று அறியமுடிந்தது.

அதேவேளை, “தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல் தந்திரத்தில் இருந்து விடுபட்டு மக்கள் வழிக்குத் திரும்ப வேண்டும்” – என்று வேலுகுமார் எம்.பி. பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை நிறைவடைந்த பின்னர் தனது முகநூல் பக்கத்தில் அவர் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.