தினேஷ் ஷாப்டர் கொலை குறித்து பிரையன் தோமஸிடம் CID விசாரணை!

ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பாக முன்னாள் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் சிஐடி விசாரணை நடத்தி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரையன் தோமஸ் மற்றும் தினேஷ் ஷாப்டருக்கு இடையில் பல கோடி ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனையொன்று நீண்ட காலமாக இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வர்ணனையாளர் வாங்கிய பணத்தை செலுத்தாததால் போலீசாரால் முன்பு கைது செய்யப்பட்டார்.

பொரளை மயானத்தில் வாகனத்தில் வைத்து தினேஷ் ஷாப்டர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தினேஷ் ஷாப்டரின் மனைவியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடனைத் திருப்பி பெறுவதற்காக கிடைத்த ஒரு தகவலை அடுத்து அதனை பெற தினேஷ் ஷாப்டர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதாக அவர் நேற்று போலீஸாரிடம் கூறியிருந்தார்.

இக் கொலை நடந்த பின் முன்னாள் கிரிக்கெட் ஆங்கில வர்ணனையாளர் பிரியன் தொமஸிற்கு, வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், காசல் மருத்துவமனை நுழைவாயிலில் ஊடாக ஷாஃப்டரின் கார் மயானத்துக்குள் செலுத்தப்பட்டு, மயானத்தில் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட போது ஆபத்தான நிலையில் இருந்த தினேஷ் ஷாஃப்டர் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும், பிரையன் தோமஸ் தொடர்பான சம்பவத்தைப் போன்று வேறு பல அம்சங்களிலும் புலனாய்வுத் திணைக்களங்கள் கவனம் செலுத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொலை, ஒப்பந்தத்தின் பேரில் செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ள சந்தேகம் விசாரணைத் துறையினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.