4.6 பில்லியன் பெறுமதியான போதை பொருள்களுடன் தென் கடலில் கைப்பற்றப்பட்ட கப்பல்.

கடற்படையினரால் 14ம் தேதி தென் கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட 4.586 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பெறுமதியான ஐஸ் (Crystal Methamphetamine) மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பல நாள் கடலில் தத்தளித்த மீன்பிடிக் கப்பலும் சந்தேகநபர்களும் இன்று (18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

128 கிலோ 327 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 98 பொதிகளில் அடைக்கப்பட்ட 106 கிலோ 474 கிராம் ஹெரோயினும் இந்த மீன்பிடிக் கப்பலில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பதின்மூன்று உறைகளைக் கொண்ட 94 பொதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை, அரச புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து இலங்கையின் தெவந்தரா முனையிலிருந்து 229 கடல் மைல் (சுமார் 424 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த பணியை இலக்காக கொண்டு இலங்கை கடற்படை கப்பல் சமுதுர இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் பல நாட்களாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.

தெவுண்தர முனையிலிருந்து சுமார் 229 கடல் மைல்கள் (சுமார் 424 கிமீ) தொலைவில் உள்ள தென் கடலை நோக்கி சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பல் செல்வதை பல நாட்களாக கடற்படையினர் கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, அந்த கப்பலுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய வந்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒரு படகிலிருந்த , 8 சந்தேக நபர்களும் அதே கப்பலுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய வந்ததாக சந்தேகிக்கப்படும் 6 சந்தேக நபர்களும் இலங்கை கடற்படையின் சமுதுரவிலிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தங்காலை, நகுலகமுவ, கொஸ்கொட மற்றும் பலபிட்டிய ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 29 மற்றும் 59 வயதுடையவர்கள்.

புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா போதைப்பொருள் கையிருப்பு பரிசோதனையில் கலந்துகொண்டார்.

சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், இலங்கை கடற்படையினர் 2022 ஆம் ஆண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 28.05 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.