ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரில் சந்திப்பு..!!

உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான போர் ஒன்பது மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

உக்ரைனுக்கு‌ பல நாடுகள் ஆதரவாக இருந்தாலும் போரில் உக்ரைனுக்கு பெரும் பக்கபலமாக இருப்பது அமெரிக்கா தான். எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்கிற முறையில் ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வாரி வழங்கி வருகிறது அமெரிக்கா.

இந்நிலையில் ஜெலன்ஸ்கி திடீர் பயணமாக நேற்று அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

போர் தொடங்கியதற்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள ஜெலன்ஸ்கி, இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய ஜெலன்ஸ்கி, “அமெரிக்க காங்கிரசின் ஆதரவுக்கு நன்றி. ஜனாதிபதிக்கு மிக்க நன்றி, இரு கட்சி ஆதரவுக்கு நன்றி, எங்கள் சாதாரண மக்களின் சார்பாக , அமெரிக்கா மக்களுக்கும் நன்றி” என்று அவர் கூறினார்.

இதன்போது பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், “நம்புவது கடினம், இந்த கொடூரமான போரில் 300 நாட்கள் கடந்து, புதின் ஒரு தேசமாக இருப்பதற்கான உக்ரைனியர்களின் உரிமையின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தினார், மேலும் அச்சுறுத்தும் காரணத்திற்காக தவிர வேறு எந்த காரணமும் இல்லாமல் அப்பாவி உக்ரேனிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக உக்ரைனில் பல மாதங்களாக கடுமையான சண்டை நடந்து வரும் பக்முத் நகருக்கு முன்னறிவிப்பு இன்றி சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அங்கு ராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் சிலர் உக்ரைன் தேசியக்கொடியில் தங்களின் கையொப்பங்களை இட்டு ஜெலன்ஸ்கியிடம் வழங்கினர்.

அந்த கொடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கொடுக்கும்படி ராணுவ வீரர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதன்படி ஜோ பைடனிடம் ஜெலன்ஸ்கி அந்த கொடியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.