காதல் விவகாரம்: முன்னாள் இராணுவச் சிப்பாய் கத்தியால் குத்திப் படுகொலை!

முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குருநாகல் நகரில் இடம்பெற்றுள்ளது.

காதல் விவகாரத்தால் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் இறுதியில் கத்திக் குத்தில் முடிவடைந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 63 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை குருநாகல் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் எனப் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவரின் உறவினரான யுவதி ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததால் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இறுதியில் கத்திக் குத்தில் முடிவடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.