மொட்டு தோற்றாலும் தேர்தலை சந்திக்க வேண்டும்! மக்களை விட்டு ஓட முடியாது என்கிறார் மஹிந்த.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்கடிக்கப்படும் என தாம் நினைக்கவில்லை. ஆனால் அத்தகைய தோல்வி ஒன்று ஏற்படுமானால், அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸ் அரசியல் நிருபர் இக்பால் அதாஸ் சந்தித்து பேட்டி கண்ட போதே,கட்சியால் மக்களை விட்டு ஓட முடியாது என்றும் தோற்றால் எங்கே தவறு செய்தோம் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

“மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் தவறு செய்திருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம். அவர்களின் உணர்வுகளை நாம் புறக்கணித்து எதுவும் நடக்காதது போல் தொடர முடியாது. நம் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அங்கு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததற்கு தாம் பொறுப்பு என்ற குற்றச்சாட்டுக்கு, கோத்தபாய ராஜபக்ச மட்டுமல்ல, இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே அதற்கு பொறுப்பு , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் பிரதமராக இருந்த தானும் பொறுப்பு என்ற கருத்தை மக்கள் மத்தியில் தாம் நிராகரிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“கோட்டாபயவின் பணிகளில் நான் தலையிடவில்லை. கோத்தபாயவுக்கு அரசியல் தெரிந்திருக்கவில்லை. அவர் ஒரு ராணுவ அதிகாரி. அவர் தனது சொந்த தீர்ப்புகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தார். அவர் மீண்டும் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை இல்லை என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.