தூர பயணம் செல்லும் பயணிகள் விமானத்தில் முகக்கவசம் அணிய பரிந்துரை!

உலக நாடுகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்றின் பரவல் காணப்படுவதால், நீண்ட தூரங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் விமானத்தில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.
அத்துடன் விமான பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர், பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

புதிய வைரஸ் திரிபு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் நாடுகள் பாரபட்சமின்றி கொரோனா கட்டுப்பாடுகளை அமுலாக்க வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.