யாழ்ப்பாணத்தில் இன்று கடமையைப் பொறுப்பேற்கும் புதிய அரச அதிபர்!

யாழ்ப்பாணம் மாவட்ட புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நேற்றுப் பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடமிருந்து தனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 9.30 – 10.30 வரையான சுபவேளையில் தனது கடமைகளை அவர் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

யாழ். மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து நிலவிய வெற்றிடத்துக்குப் புதிய அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளாயே. இவர் அரச அதிபராகக் கடமையேற்க முன்னர் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.