மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபராக மீண்டும் கலாமதி நியமனம்!

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்றுப் பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரிடமிருந்து தனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவர் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இவர் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராகவும் முன்னர் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய கே.கருணாகரன் ஓய்வுபெற்றுச் சென்றதைத் தொடர்ந்து நிலவிய வெற்றிடத்துக்குப் புதிய அரச அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையான காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.