ஹாக்கி உலக கோப்பை – ஷூட் அவுட் முறையில் இந்தியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து.

15-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன.

ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன. இதில் இன்று நடைபெற்ற 2வது சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடின. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3- 3 என்ற கணக்கில் கோல் அடித்து சமனிலை வகித்தன.

இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பரபரப்பாக நடந்த ஷூட் அவுட் முறையில் நியூசிலாந்து 5-4 என்ற கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. இந்தியா நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டதுடன் தொடரில் இருந்தும் வெளியேறியது.

Leave A Reply

Your email address will not be published.