எஸ்.பி., ஜோன்சன், ரோஹிதவுக்கும் அமைச்சுப் பதவிகள்?

பவித்திரா வன்னியாராய்ச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாகியதைத் தொடர்ந்து மேலும் மூவர் அமைச்சர்களாகவுள்ளனர்.

எஸ்.பி. திஸாநாயக்க, ஜோன்சன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்த்தன ஆகிய மூவருமே அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.

ஆரம்பத்தில் இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக நின்றார். இப்போது வழங்குவதென்ற முடிவுக்கு வந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

பஸில் ராஜபக்ச அமெரிக்கா செல்வதற்கு முன் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்காக 12 பேர் அடங்கிய பெயர்ப்பட்டியல் ஒன்றை ஜனாதிபதியிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அவற்றுள் நாமல் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்சன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்த்தன ஆகிய நால்வருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கமாட்டேன் என்று கூறி வந்தார். இப்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.