இலங்கை வரலாற்றில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஒரு பெண்?

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் பலமானவர்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பிக்கையான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் தலைவராக சிவிலியன் பெண் ஒருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இந்நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறையில் முக்கிய பதவிகளை வகித்த மூத்த பெண் அதிகாரி ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர்  பதவிக்கு பொலிஸாருக்குள் பாரிய போட்டி ஏற்பட்டுள்ளதுடன், அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கும் , பொலிஸ் துறையை சீரமைக்கவும்    சிவில் அதிகாரி ஒருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த பொலிஸ் மா அதிபராக பெண் ஒருவர் நியமிக்கப்படலாம் என அண்மையில் பொலிஸ் மா அதிபர் கருத்து வெளியிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும், இந்தப் பதவியை ஏற்க குறிப்பிட்ட  மூத்த பெண் அதிகாரி இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு காவல் துறையில் சிவில் அதிகாரிகள் ஐஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர், அவர் நியமிக்கப்பட்டால் காவல்துறையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஐஜிபி என வரலாற்றில் இடம் பெறுவார்.

Leave A Reply

Your email address will not be published.