சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கமாட்டேன்! – சஜித் பகிரங்க அறிவிப்பு.

அரசால் நடத்தப்படுகின்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று அறிவித்துள்ளார்.

“நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், சுதந்திர தின நிகழ்வுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்றும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெருமவும், சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.