நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 186 ரன்னில் அவுட் ஆனார். ஜோ ரூட் 153 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டும், பிரேஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நியூசிலாந்து அணி 42 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் 2ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டிம் சவுத்தி ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் அவுட்டானார். 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிளெண்டல், டிம் சவுத்தி ஜோடி 98 ரன்கள் சேர்த்தது.

இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் , ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேக் லீச் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.