பூநகரி லீக் வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்து போட்டி முடிவுகள்

பூநகரி கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற பூநகரி கால்பந்தாட்ட சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் கழங்களின் அணிகளுக்கு இடையிலான பூநகரி லீக் வெற்றிக் கிண்ணத்திற்கான ( 2020) அணிக்கு 11 பேர் பங்கு பற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் முழங்காவில் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்று வருகின்றது.

இதில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஆட்டத்தில் கலையொளி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து சென்.அன்ரனீஸ் விளையாட்டுக் கழக அணி மோதிக் கொண்டது இதில்சென்அன்ரனீஸ் விளையாட்டுக் கழக அணி 3.0என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஜின்னா விளையாட்டுக் கழக அணியைஎதிர்த்து ஜொலிபோயின் ஐக்கியம் விளையாட்டுக் கழக அணி மோதிக் கொண்டது. ஆட்ட நேரமுடிவில் இரண்டு அணியிரைும்.ஏதுவித கோல்களையும் பதிவு செய்யாது போகஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. வெற்றி தோல்வி காண்பதற்காக சமநிலை தகர்ப்பு உதை வழங்கப்பட்டது.இதில் ஜொலிபோயின் ஐக்கியம்
விளையாட்டுக் கழக அணி 4:3என்ற கணக்கில் வெற்றி. பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.