கேரளா செல்ல இ-பாஸ் இனி வேண்டாம்

கேரள அரசு பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணியருக்காக இ-பாஸ் முறையை ரத்து செய்து உள்ளது.

இதனால் மருத்துவம்,வணிகம் நோக்கில் வரும் பயணியர்களுக்கு நிம்மதி ஏற்பட்டதுள்ளது.

வெளிமாநிலத்திலிருந்து வருவோர், கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடியில், பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் அவ்விபரங்கள் கோவிட்-19 இணைய தளத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பயணியர் மொபலுக்கு தகவல் அனுப்பப்படும்.அதன் பின்னரே அவர்கள் கேரளத்தினுள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலமான,ஊட்டி,கொடைக்கானல்,ஏலகிரி போன்ற ஊர்களுக்கு பிறமாவட்ட,மாநிலத்தவர்  மாவட்ட கலெக்டரிடம் இ-பாஸ் பெற வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.