ரணிலை விரட்டியடிக்க வேண்டும்; இனியும் பிரிந்திருக்காமல் இணைந்து போராடுவோம்! – யாழில் வசந்த முதலிகே அழைப்பு.

வடக்கு, தெற்கு என இனியும் நாங்கள் பிரிந்து இருக்காமல் இணைந்து செயற்பட வேண்டும் என யாழ்ப்பாணத்தில் அழைப்பு விடுத்தார் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும், இந்த விடயங்களில் தாமும் இனி அதிக கவனம் செலுத்துவார் எனவும் அவர் உறுதியளித்தார்.

வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்திருந்தார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் அவருடன் கூடவே வந்திருந்தனர்.

அவர்களுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். நகரிலுள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் முடிவில் பேசிய வசந்த முதலிகே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மஹிந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் தொடங்கியது.

அந்தப் போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதியான கோட்டாவைக் கலைத்த பின்னர் ஜனாதிபதியாக ரணில் வந்துள்ளார்.

கோட்டா உள்ளிட்ட ராஜபக்ச தரப்பைப் பாதுகாக்கும் வகையிலையே ரணில் செயற்படுகின்றார்.

இதற்காக அடக்குமுறைகளைப் பிரயோகித்து மக்கள் விரோத செயற்பாடுகளையே அவரும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவரும் விரட்டியக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.