ஆஸ்கர் மேடையில் அசத்திய தீபிகாபடுகோனே.. வைரலாகும் புகைப்படம் & Video.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினராக நடிகை தீபிகாபடுகோனே பங்கேற்றார். சிவப்பு கம்பளம் போர்த்திய விழா மேடையில் தீபிகா படுகோனே கருப்பு கவுன் அணிந்து பங்கேற்றார்.

37 வயதான அவர் தனது விருப்ப உடையான லூயிஸ் உய்ட்டன் ஆப் தி ஷோல்டர் மெர்மெய்ட் பிளாக் கவுனில் அழகு தேவதையாக ஜொலித்தார். அவர் கழுத்தில் 82oE என்ற பச்சை (டாட்டூ) குத்தியிருந்தார். தீபிகாவின் மேக்கிங் அவரை ஹாலிவுட் நடிகை போல கிளாமராக காட்டியது. அவர் அணிந்திருந்த பிரைஸ்லெட்டுடன் கூடிய நெக்லஸ் அனைவரின் பார்வையையும் அவரது பக்கம் திருப்பியது.

பின்னர் ஆஸ்கர் மேடை ஏறிய அவர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தையும், அதில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் குறித்தும் அறிமுகம் கொடுத்தார். முக்கியமாக பாடலின் நடன அசைவுகள், பாடலுக்கு யூ டியூப்பில் வந்த வியூவ்ஸ், ரீல்சில் ரசிகர்கள் ஆடிப்பாடியது என வரிசையாக அடுக்கினார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அவர் பேச்சு முழுவதும் இடை இடையே சிரித்தார்.

 

தீபிகாபடுகோனே ஆர்.ஆர்.ஆர். படம் பற்றி பேசிய போது ரசிகர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அவரை பேசவிடாமல் திக்குமுக்காட செய்தனர். அதன் பிறகு நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மேடையில் அரங்கேற்றப்பட்டது.

 

தீபிகாபடுகோனேக்கு முன்பு மாடல் நடிகை பெர்சிஸ் கம்பட்டா மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஆஸ்கரில் பங்கேற்றுள்ளனர். தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்கர் விழாவில் தான் அணிந்திருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.