“நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்” என இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

இந்தியா பாகிஸ்தானை ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதால், வான், கடல் அல்லது தரை வழியாக இந்தியா நடத்தும் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள பாகிஸ்தான் தனது படைகளை தயார்படுத்தி வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிராக எந்தவொரு சூழ்நிலை ஏற்பட்டாலும், “கடவுளின் பெயரால்” அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும், நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகள் என்பதால், உருவாகி வரும் இந்த போர்ச் சூழலில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் ப்ரூஸ் தெரிவித்தார்.

இருப்பினும், காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானை தாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.

தாக்குதல் நடத்த வேண்டிய நேரம் மற்றும் இலக்குகளை தீர்மானிக்க இந்திய பிரதமர் அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.