றேஞ்சர்ஸ்,நவஜீவன்ஸ் அணிகள் இறுதிக்கு தகுதி

கரவெட்டி பிரதேச இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கொற்றாவத்தா றேஞ்சர்ஸ் இளைஞர் கழக அணி, உடுப்பிட்டி நவஜீவன்ஸ் இளைஞர் கழக அணி ஆகியவை இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றன.

நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் கொற்றாவத்தா றேஞ்சர்ஸ் இளைஞர் கழக அணியை எதிர்த்து சமரபாகு நீயூட்டன் இளைஞர் கழக அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தா றேஞ்சர்ஸ் இளைஞர் கழக அணி
2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

இரண்டாவது அரையிறுதி யாட்டத்தில் இமையாணன் மத்தி இளைஞர் கழக அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் இளைஞர் கழகஅணி மோதியது.
ஆட்டம் சமநிலையில் முடிவு பெற்றதால் வெற்றி தோல்வி காண்பதற்காக சமநிலை தகர்ப்பு உதை வழங்கப்பட்டது.இதில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் இளைஞர் கழகஅணி
2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.