எரிபொருள் வரிசைகள் மாயம் : எரிபொருள் விலை குறைக்கபடும் என அரசு அறிவிப்பு

ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நாட்டில் தென்பட்ட எரிபொருள் வரிசைகள் முற்றிலும் இல்லாமல் போய் விட்டன.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை பெருமளவில் குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்ததையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை காணாமல் போயுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்று சில வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

எவ்வாறாயினும், நாட்டில் எரிபொருள் விநியோகம் நாளை வழமைக்குத் திரும்பும் என எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.