ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – பெசில் ராஜபக்ஷ

ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளுர் விவசாயிகளையும் மீனவர்களையும் பலப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

ஒபடால்கம குலோப டயர் இன்டஸ்ரீஸ், குலோபல் சீபூட் நிறுவனத்தை பார்வைவயிட சென்ற போதே பெசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

விவசாயிகள் மீனவர்கள் கைத்தொழிலாளர்கள், போன்ற அனைவரது உற்பத்திகளையும் சர்வதேச சந்தைக்கு அனுப்பும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நாம் திட்டங்களை வகுத்துள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.