முன்பள்ளி ஆசிரியை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்

தனது முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இளம் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை, கொப்பேகடுவ, கினிஹேன பிரதேசத்தில் வீதியொன்றில் வைத்து 25 வயதுடைய இளம் முன்பள்ளி ஆசிரியை கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முருதலாவ பிரதேசத்தில் வசிக்கும் அவர் பெயர் அஞ்சலி சாப்பா.

பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்குபற்றச் சென்ற போதே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

சடலம் இலுக்தென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.