வீடு தேடி வரும் கல்வி – அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்

 

கோரோனாவால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், கோவை நகரில் துடியலுார், மேட்டுப்பாளையம், காரமடை, அன்னுார் பகுதி ஆசிரியர்கள் மாணவர்களைத் தேடிச் சென்று கல்விக் கற்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

கோவை சோமையம்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர் கருப்புசாமி கூறியதாவது:கொரானாவால் ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. ஆயினும், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பலரிடம், ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்புகளில், அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும், கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தலைமையாசிரியர் சித்ராதேவி அனுமதியுடன், மாணவர்களின் பகுதிகளுக்கு நேரடியாக சென்று, கோவில்கள், பொது இடங்கள், மரத்தடிகளில் பாடம் நடத்தி வருகிறோம்.
மாணவர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசங்கள் வழங்கி, சமூக இடைவெளியுடன் உட்கார வைப்பதால், நோய்த்தொற்று பயம் இல்லை.தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பை, புத்தகங்கள், நோட்டுகள் வாங்காமல் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு, நேரடியாக சென்று வினியோகித்து வருகிறோம். பெற்றோர்களும் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.