ரூ.2 கோடி லாட்டரி பரிசு: ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. நம்மில் அனைவருமே ஏதாவது ஒரு வழியில் பணத்தை நோக்கிதான் ஓடிக்கொண்டிருக்கிறோம். வளமாகவும் வசதியுடனும் வாழ்வதற்கு பணம் கட்டாயம் தேவைப்படுகிறது.

ஆனால் எப்போதும் போல காலை வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பும் வகையிலயோ அல்லது சுய தொழில்கள் மூலமாகவோ நாம் எதிர்பார்த்த அளவு செல்வத்தை மிகக் குறைந்த கால இடைவெளியில் ஈட்டுவது என்பது பெரும்பாலும் முடியாத ஒரு காரியமாகவே இருந்து வருகிறது.

ஆனால் இதில் சிலருக்கு விதிவிலக்கு உண்டு. அதிர்ஷ்டம் எல்லோருக்கும் திடீரென கதவை தட்டும் என்று சொல்ல முடியாது. ஆனால் சிலருக்கு நிஜத்திலேயே இப்படி நடப்பதுண்டு. திடீர் அதிர்ஷ்டம் கதவைத் தட்டி கூரையை பிய்த்து கொண்டு கொட்டுவது உண்டு. அப்படி ஓர் அதிர்ஷ்டம் தான் ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த 38 வயது பெண்மணிக்கு கிடைத்துள்ளது. ஹமிதா பேகம் என்ற பெயர் கொண்ட அந்த பெண்மணிக்கு லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் திராம் அந்த பெண்ணுக்குபரிசாக கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில்இது ரூ.2,22,28,303 ஆகும்.

ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெற்ற 122 வது வார மசூஸ் குலுக்கலில் பெண்மணிக்கு இந்த ஜாக்பாட் கிடைத்துள்ளது. இவர் ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கடந்த மூன்று வருடங்களாக வசித்து வருகிறார். மெடிக்கல் கோடராக பணிபுரிந்து வரும் இவர், தன்னுடைய இந்த லாட்டரியில் கிடைத்த வருமானத்தை தனது குடும்பத்தின் எதிர்கால செலவுகளுக்கும், தம்முடைய நான்கு குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு பரிசு கிடைத்ததை அடுத்து தனக்கு இதை தவிர வேறு எதையும் யோசிக்க முடியவில்லை என்றும் அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்

இதில் ஆச்சரியபடத்தக்க விஷயம் என்னவெனில் மார்ச் 4-ம் தேதி மாற்றி அமைக்கப்பட்ட குலுக்கல் முறையில் ஒரு மில்லியன் திராம்ஸ் பரிசை பெற்ற நான்காவது தனிநபர் இந்த பெண்மணிதான். மேலும் இந்த குலுக்கல் முறையில் வெற்றிபெறும் முதல் பெண் வெற்றியாளரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய குலுக்கல் முறையின் நோக்கமே ஒவ்வொரு வாரமும் ஒரு தனி நபர் கோடீஸ்வரர் ஆவதை உறுதிப்படுத்துவதே ஆகும்.

இந்த குலுக்கல் முறையில் பங்கு பெற விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடை பெறும் எபிக் டிரா மற்றும் சூப்பர் சாட்டர்டே ஆகியவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இரண்டு செட் எண்களை ரிஜிஸ்டர் செய்து இந்த பரிசு போட்டியில் இணைந்து கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.