நானுஓயாவில் கோர விபத்து! பெண் ஒருவர் பரிதாபப் பலி!! – வான் சாரதி கைது.
நுவரெலியா, நானுஓயாவில் நேற்றுக் காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லிந்துலைப் பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதுடைய திவ்யா உமாச்சந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தொழில் நிமித்தம் நேற்றுக் காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.


கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வான் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பில் 42 வயதான வான் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
