உடன் வெளியேறுங்கள்! – ராஜிதவுக்கு ஐ.ம.ச. எச்சரிக்கை.

“ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்க முடியாவிட்டால் ராஜித சேனாரத்ன கட்சியிலிருந்து வெளியேறலாம்” – என்று அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜித சேனாரத்ன எம்முடன் இணைந்து செயற்பட்டவர். எனினும், கட்சியில் இருந்து வெளியேறுவது போன்ற அறிவிப்புகளை ஊடகங்களுக்கு வெளியிட்டு வருகின்றார்.

ஒன்று கட்சியில் இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் வெளியேற வேண்டும். அப்போது எம்மால் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.