பிரயோசனமற்ற போராட்டங்கள்தான் நாடு படுவீழ்ச்சி அடைந்ததாம்! – புலம்புகின்றார் மஹிந்த.

பிரயோசனமற்ற இப்படியான போராட்டங்கள்தான் நாட்டை கடந்த காலங்களில் படுவீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் போராட்டம் நடத்த முழு உரிமையுண்டு. அதற்காக பிரதேசங்களை முடக்கி வாழ்வாதாரத்தை முடக்கி போராட எவருக்கும் அனுமதி வழங்க முடியாது.

ஒரு சில தரப்பினரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிரயோசனமற்ற இப்படியான போராட்டங்கள்தான் நாட்டை கடந்த காலங்களில் படுவீழ்ச்சிக்கு இட்டுச் சென்றன.

நாட்டில் சகல உரிமைகளும் இருக்கின்றது என்பதற்காக எவரும் சட்டத்தை மீறி செயற்பட முடியாது. இப்படியான போராட்டங்களால் கடந்த காலங்களில் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தமையையும் எளிதில் மறந்துவிட முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.