வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு.

தேவையான பொருட்கள்: சிக்கன் – 1 கிலோ சின்ன வெங்காயம் – 30 தக்காளி – 4- பச்சை மிளகாய் – 2 இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு – 1 உப்பு – சுவைக்கேற்ப கறிவேப்பிலை – சிறிது தேங்காய் எண்ணெய் – 1/4 கப் தாளிப்பதற்கு… சோம்பு – 2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பிரியாணி இலை – 1 ஏலக்காய் – 5 கிராம்பு – 5 பட்டை – 1 துண்டு வறுத்து அரைப்பதற்கு… வரமிளகாய் – 10-12 மல்லி விதைகள் – 4 டேபிள் ஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் மிளகு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – 1 கையளவு அரைப்பதற்கு… துருவிய தேங்காய் – 1 கப் பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன் சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும். * உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ‘வறுத்து அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் அதே மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாவ வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். * பிறகு அதில் தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் சிக்கனை கழுவிப் போட்டு, 5-6 நிமிடம் நன்கு சிக்கனை வதக்க வேண்டும். * பின்னர் அதில் வறுத்து அரைத்த மசாலா மற்றும் நீரை ஊற்றி கிளறி, அதை குக்கரில் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உருளைக்கிழங்குகளை போட்டு, பின் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு தயார்.

Leave A Reply

Your email address will not be published.