சமூக ஆர்வலராக இருந்து வன்முறையில் ஈடுபட்ட அருண் சித்தார்த்தன் உள்ளிட்ட 05 பேருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் சமூக ஆர்வலராக செயல்படும் அருண் சித்தார்த்தன் உள்ளிட்ட ஐந்து பேரை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி , சொத்துக்களை அழித்தமை மற்றும் உரிமையாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அருண் சித்தார்த்தனுடன் ஏழு பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் இருவர் , சிறிய குழந்தைகள் உள்ள பெண்கள் என்பதால், யாழ்ப்பாணப் பொலிசார் அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்ததுடன், மற்ற ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் “ஆவா கும்பல்” தலைவர் தானே என அருண் சித்தார்த்தன் , தென்னிலங்கை ஊடகங்களுக்கு அறிவித்திருந்துதோடு, தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்தில் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அருள் சித்தார்த்தன் பணம் பெறும் அரசியல் கட்சிகள் தவிர்த்து, யாழ்ப்பாண அரசியல் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை தாக்கியதாகவும், அவர்களின் அரசியல் மேடைகள் மற்றும் அலுவலகங்களை அழித்ததாகவும், கூட்டங்கள் நடக்கும் போது தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.