இதய அறுவை சிகிச்சை செய்ய காத்திருக்கும் குழந்தைகளுக்கு நல்ல செய்தி!

இதய அறுவை சிகிச்சை செய்ய காத்திருக்கும் 75 குழந்தைகளை இலவச  அறுவை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது

இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ள 75 சிறார்களுக்கு இலவச சத்திரசிகிச்சையை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கொழும்பு லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

ரோட்டரி கிளப் (மேற்கு கொழும்பு) உடன் இணைந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்காக ரோட்டரி கிளப் (மேற்கு கொழும்பு) 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை மானியமாக வழங்க உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் செய்யக்கூடிய சத்திரசிகிச்சைகள் இருந்தால் இலங்கையிலும் , ஏனைய குழந்தைகளை இந்தியாவுக்கும் அழைத்துச் சென்று, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், அதையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அவ்வாறான நோயாளர்கள் இருப்பின், லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் கிளினிக் இலக்கத்துடன் அவர்களுக்கு அறிவிக்க முடியும் எனவும், லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் கிளினிக்குகளுடன் தொடர்பில்லாத நோயாளிகள் இருப்பின் அவர்களின்  நிலைக்கு ஏற்ப வாய்ப்புகள், அவர்களுக்கு வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 

ரோட்டரி கிளப் (மேற்கு கொழும்பு) சத்திரசிகிச்சை இணைப்பாளர் டொக்டர் அரவிந்த திஸாநாயக்க, மே மாத தொடக்கத்தில் இருந்து இந்த சத்திரசிகிச்சைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.