“கடைசியாக உனக்கு அமைதி கிடைத்து விட்டது…” – மூன்றாவது கணவர் மறைவுக்கு இரங்கல் சொன்ன வனிதா விஜயகுமார்!

தமிழ் திரையுலகில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருந்தவர் நடிகர் விஜயகுமார். இவரின் மூத்த மகளான வனிதா , விஜய் நடிப்பில் வெளியான , ‘ சந்திரலேகா ‘ படம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து ஒரு படத்தில் மட்டுமே நடித்த அவர் திருமணம் செய்து கொண்டு திரைத்துறைக்கு பிரேக் கொடுத்தார்.

இவர் 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஐந்து வருடங்கள் தொடர்ந்த இந்த திருமணம் உறவு 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இதன்பின், 2007ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மூன்று வருடம் ஒன்றாக வாழ்ந்த இருவரும் 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து 2020ம் ஆண்டு பீட்டர்பால் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்தார். அந்த சமயத்தில் கொரோனா பற்றிய தகவல்கள் ஒரு பக்கம் தீயாக பரவி வந்த நிலையில், மற்றொரு புறம் சமூக வலைதளத்தையே ஸ்தம்பிக்க வைத்தது நடிகை வனிதா மற்றும் பீட்டர் பாலின் மூன்றாவது திருமண பஞ்சாயத்து. இவர்கள் இருவருடைய திருமணத்திற்கு, ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் கண்டமேனிக்கு வனிதா மற்றும் பீட்டர் பாலை வச்சு செய்தனர்.

இந்த பிரச்சனைக்கெல்லாம் முக்கிய காரணம் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவி எலிசபத்தை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை இரண்டாது திருமணம் செய்து கொண்டது தான். இது குறித்து எலிசபர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இந்த சம்பவம் மிகப்பெரிய பிரச்சினையாக பேசப்பட்டது. அதேபோல் வனிதா எலிசபத் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.

பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்ள பல்வேறு எதிர்ப்புகள் கிளப்பிய நிலையில், மிகவும் எளிமையான முறையில் பீட்டர் பால் குடும்ப வழக்க படி, கிருஸ்தவ முறைப்படம், பைபிள்,வாசித்து மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் யங் ஜோடிகளையே மிஞ்சும் வகையில் ஹனி மூன், அவுட்டிங் போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டார் வனிதா விஜயகுமார்.

ஆனால் இந்த வாழ்க்கை ஒரு வருடம் கூட நிலைக்காதது துரதிஷ்டவசம் தான். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பீட்டர் பாலுடன் கோவாவுக்கு வனிதா மற்றும் அவருடைய மகள்கள் சென்ற நிலையில், பீட்டர் பால் அங்கு ஓவராக சரக்கு அடித்து விட்டு எந்நேரமும், குடி சிகரெட் என இருந்ததால் வெறுத்துப்போன வனிதா அவரை வீட்டை விரட்டியடித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் பீட்டர் பால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீர் என அவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு தனது இரங்கலை பதிவு செய்துள்ள வனிதா, பீட்டர் பாலின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாமல், கண்டிப்பாக நீ இதைவிட நல்ல இடத்தில் தான் இருப்பாய். இறுதியாக உனக்கு அமைதி கிடைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

Vanitha Vijaykumar
@vanithavijayku1
My mom once taught me God helps those who help themselves! Its definitely a lesson everyone should learn. When in crossroads ,People make their own choices of path.
I am sure you found peace after battling the demons you were facing and the trauma u went thru

Leave A Reply

Your email address will not be published.