இந்திய இ-விசாக்களை வழங்கும் 175 போலி இணையதளங்கள் : அவதானம்

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இந்திய இ-விசாக்களை வழங்குவதாகக் கூறி 175 மோசடி இணையத்தளங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இந்த இணையத்தளங்கள் ஊடாக போலியான இந்திய இ-விசாக்கள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக உயர்ஸ்தானிகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, தொடர்புடைய 175 போலி இணையதளங்களின் (URL) பட்டியலை முன்வைப்பதன் மூலம், இந்திய இ-விசா விண்ணப்பதாரர்கள் அந்த இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், இது தொடர்பாக கவனமாக இருக்குமாறும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.