டைட்டில் வின்னராகி என்ன பிரயோஜனம்….. இப்ப வரைக்கும் பத்து பைசாவுக்கு பயனில்லை….

சினிமாவில் நடித்து எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கின்றது. இதற்கு ஒரு மேடையாக அமைந்தது தான் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ. அப்படி இதில் கலந்துகொண்டு அதிகமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து டைட்டில் வின்னர் ஆகியும் பிரயோஜனம் இல்லாமல் இருக்கும் பிக் பாஸ் டைட்டில் வின்னர்களை பற்றி தான் நாம் தற்போது பார்க்க போகிறோம்.

அதில் முதலாவதாக இருப்பது ரித்திகா இவருக்கு மிகப்பெரிய ஆசை படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக சிறுவயதிலிருந்தே நிறைய படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதை இவரின் கனவாக மாறியது.

அப்படி இவர் நடித்த முதல் படம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி. இந்த படத்தில் கருத்துக்கன்னி வேடத்தில் நடித்து அதன் பிறகு சிறிய கேரக்டர்களின் நடித்து வந்த இவர் மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் மேரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் இதயங்களை வென்று வெற்றியாளரானார். ஆனால் அதன் பிறகு டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்புறம் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது வரை நல்ல வாய்ப்பு எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார்.

ஆரி அர்ஜுனன் இவர் ஒரு சமூக ஆர்வலரும், தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் விவசாயத்திற்கு ஆதரவு தரக்கூடியவர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு அலையடிக்குது என்ற திரைப்படத்தின் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா வாழ்க்கையை தொடங்கியவர்.

பின்னர் ரெட்டை சுழி என்ற திரைப்படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்க இதைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் சினிமாவில் ஒரு நல்ல கதாபாத்திரம் அமையாமல் போராடி வருகிறார்.

முகேன் ராவ் ஒரு பாடகராகவும் மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் இருப்பவர் முகேன் ராவ், மலேசியாவிலிருந்து சமூக வலைதளத்தின் மூலமாக இசையா ஆல்பங்களை வெளியிட்டவர். அது மிகவும் வைரலாகி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தன. 2016 ஆம் ஆண்டு கயல்விழி என்று இவரது தமிழ் பாப் சிங்கிள் youtube இல் வைரலானது.

அதன் மூலம் பார்வையாளர்களிடமிருந்து மிகவும் பிரபலமாகினார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு வெற்றியாளராக கோப்பையை வென்றார். இதைத்தொடர்ந்து வேலன் என்ற திரைப்படத்தில் நடித்த படம் அந்த அளவுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. அதை எடுத்து இவருடைய படங்கள் எதுவும் வெளிவராமல் இழுத்து எடுத்துக் கொண்டு இருக்கின்றது

ஆரவ் என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் இந்திய நடிகரும் மாடலும் ஆவார். பிக் பாஸ் சீசன் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற வெற்றி பெற்றவர். 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் சைத்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட துறையில் அறிமுகமான இவர் அதன்பிறகு மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் படத்தில் நடிக்க அந்த படம் இவருக்கு எந்தவிதத்திலும் கை கொடுக்காததால் பிறகு கழக தலைவன் படத்தில் ஹீரோவுக்கு எதிரியாக நடித்து இருந்தார்.

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றாலும் இப்போது வரை செல்லும்படியான திரைப்படத்தின் நடிக்காமலேயே இருந்து வருகிறார்.

ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையின் பிரபல நடிகராக இருந்தார். 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் ஐந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளரானார்.

அதன்பிறகு இவருக்கு நிறைய திரைப்படங்களில் நல்ல வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் விஜய் டிவியிலேயே தொடர்ந்து வேலை செய்து வருகிறார். டைட்டில் வின்னர் ஆகியும் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் இருக்கின்றார்.

அசீம் இவர் நிறைய தமிழில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர். இவர் நடித்த சீரியலில் பிரியமானவள், பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் இந்த தொடர்கள் அனைத்தும் ஒரு வெற்றி தொடராக இருந்தது. அதன் பிறகு பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் இவரது பெயர் டேமேஜ் ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்த காரணத்தினால் வெற்றியாளராக இருந்தார்

அதன் மூலம் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது வரை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த திரைப்படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.