களுத்துறை விடுதியிலிருந்த மாணவிக்கு நேர்ந்த சாவு : காதலனுக்கு வலை வீசியுள்ள போலீஸ் (Video)

இன்று (7) மாலை களுத்துறையில் உள்ள விடுதியில் இருந்து விழுந்து  சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவி தொடர்பிலான நிகழ்வு தொடர்பான புதிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி மேலும் மூவருடன் நேற்று மாலை 6.30 மணியளவில் களுத்துறை சிறிகுருச சந்தியில் அமைந்துள்ள தற்காலிக தங்குமிடத்திற்குள் பிரவேசித்துள்ளார். வரும் போது ஆண்கள் இருவரின் கைகளிலும் மது பாட்டில்கள் இருப்பது சிசிடிவி காட்சிகளில் தெரிகின்றன. அந்த இடம் உணவு பரிமாறும் உணவகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ‘ஏசி மற்றும் ஏசியற்ற அறைகள்’ என்று குறிக்கப்பட்ட தற்காலிக தங்கும் விடுதியாகும்.

மாலை 6.30 மணிக்கு சிசிடிவி கண்காணிப்பின் போது இரண்டு ஜோடிகள் வருகிறார்கள், ஒரு இளைஞன் ஒரு பள்ளி மாணவியுடன் வருகிறான். அந்த இளைஞன் கடினமான தோற்றம் கொண்டவன் என்பதையும் CCTV காட்டுகிறது.

அவர்கள் விடுதியில் தங்க விரும்புவதாக தெரிவித்த பின்னர், ஹோட்டல் முகாமையாளர் அவர்களிடம் தேசிய அடையாள அட்டையை கேட்டுள்ளார், மேலும் உயிரிழந்த மாணவி 16 வயது மைனர் என்பதால் , அவளது அடையாள அட்டை என காதலன் வேறு ஒருவரின் அடையாள அட்டையை வழங்கியுள்ளார்.

தேசிய அடையாள அட்டையைக் காட்டி ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். பின்னர், 3வது மாடியில் உள்ள அறைகளுக்குச் சென்ற 4 பேரும், ஒரே அறையில் கூடி மது அருந்திக் கொண்டிருந்ததை சிறிது நேரம் கழித்து, ஓட்டல் ஊழியர்கள் கவனித்துள்ளனர்.

சிறிது நேரத்துக்கு பின்னர், குழுவில் இருந்த ஒரு காதல் சோடி மட்டும் விடுதியை விட்டு வெளியேறியதுடன், உயிரிழந்த மாணவியும் , அவரது காதலரும் விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் விடுதியின் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக மாணவி விழுந்துள்ளார். அவர் விழுந்தாரா? அல்லது தள்ளிவிடப்பட்டாரா என இதுவரை யாருக்கும் தெரியாது.

ஆரம்பத்தில் முதல் சோடி சென்ற சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு உயிரிழந்த மாணவியின் காதலரான இளைஞன் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர். சிசிடிவி சோதனையின் போது, ​​அந்த இளைஞன் காதில் போனை வைத்துக்கொண்டு பேசிக் கொண்டு வேகமாக வெளியே செல்வதை அவதானிக்க முடிகிறது.

அதன்பிறகு வெளியே சென்ற யாரும் திரும்பி வரவில்லை, சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு உணவு எடுக்க வந்த ஒருவர் விடுதியை ஒட்டியுள்ள ரயில் பாதையில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக தங்குமிட ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் மாணவி ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் களுத்துறை பாடசாலையின் 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீரென ஹோட்டல் அறையை விட்டு பீதியுடன் வெளியேறிய இளைஞன், முன்னதாக ஹோட்டலில் இருந்து வெளியேறிய இளைஞனையும், யுவதியையும் அழைத்து அவசரம் எனக் கூறிக் கொண்டு  வெளியே சென்றுள்ளார்.

பின்னர், ரயில் தண்டவாளத்தில் விழுந்த மாணவியை முதல் சோடியும், காதலனும் சம்பவ இடத்துக்குச் சென்று ரயில் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தியதுடன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முதல் சோடி , நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் கூற முடிவு செய்து அங்கிருந்து வெளியேறி இரவு 9.30 மணியளவில் போலீஸாரிடம் சரணடைந்துள்ளனர்.

முதல் சோடியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த மாணவி மூன்றாவது மாடியில் இருந்து ரயில் பாதையில் குதித்ததாகவும், வேறு வழியின்றி தாங்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

உயிரிழந்த மாணவியுடன் தங்கியிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபரை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பியோடிய சந்தேகநபரின் முகவரிகளை சோதனையிட்ட போது, ​​அவர் இரண்டு பெண்களை ஏற்கனவே திருமணம் செய்தவர் என்பது தெரிய வந்துள்ளதுடன், அவர் இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.