நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு ஜீப் விபத்து (Video)

நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு ஜீப் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி கடற்கரை மாவத்தை பகுதியில் , குறித்த வாகனம் சறுக்கி இரண்டு கார்கள் மற்றும் மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனான , மாணவன் அதிர்ச்சியடைந்தமையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்தில் மூன்று வாகனங்களும் மின் கம்பமும் பலத்த சேதமடைந்தன.

சிசிடிவி கேமராவில் சொகுசு ஜீப் சில அடிக்கு மேல் மோதிச் செல்வது பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.